தூத்துக்குடியில் HCL-ல் Procurement Executive வேலைவாய்ப்பு – 2024

Hcl-hiring 2024 தூத்துக்குடி: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வான நபர்கள் தூத்துக்குடியில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக செயல்படும் எச்சிஎல் நிறுவனம் சென்னை, மதுரை போன்ற இடங்களில் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. இதற்கு இணையாக, பல்வேறு தொழில் சார்ந்த Procurement பணிகளுக்காக பிற மாவட்டங்களிலும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இம்முறை தூத்துக்குடியில் பணியாற்ற தேவையான Procurement Executive பதவிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, ஏதாவது ஒரு பிரிவில் டிகிரிஅல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Read Also: ராணுவத்தில் சேர அருமையான வாய்ப்பு: கோவையில் நவம்பர் 4ம் தேதி ஆள்சேர்ப்பு முகாம்-army job

விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச, எழுத திறமை அவசியம். அதேபோல் ARIBA டூல் (e-rfx) மற்றும் ARIBA my procure Module பற்றிய நுணுக்கமான அறிவு வேண்டும். மேலும் Procurement துறையில் குறைந்தது 4 முதல் 6 ஆண்டுகள் வரை பணி அனுபவம் அவசியம்.

இதில் கூடுதலாக Vendors Database, Market Trends, Vendor Management & Development குறித்த புரிதல் தேவைப்படுகிறது. MS Office, Outlook, PowerPoint, Excel, SAP, Ariba போன்ற மென்பொருட்களில் திறமை கொண்டிருப்பது மேலதிக பலனாக இருக்கும்.

இந்த வேலைக்கு சம்பளம் பற்றிய விவரம் தற்போது குறிப்பிடப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின் போது தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

தகுதியானவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, இண்டர்வியூவுக்காக அழைக்கப்படுவர்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

procurement transformation,procurement,hcl hiring process,procurement officer interview questions,hcl recruitment for freshers 2022,hcl lateral hiring process,procurement analyst interview questions,procurement assistant interview questions,hcl recruitment 2022 for freshers registration,interview preparation for experienced,hcl interview questions for freshers 2022,excel test for employment,salary expectations interview for experienced

Leave a Comment