Site icon masterjobs.in

Tamil Nadu Sales Tax Jobs-தமிழ்நாடு விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் – விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள்!

Tamil Nadu Sales Tax Job Vacancies: சென்னை: தமிழ்நாடு விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மேல் முறையீட்டு தீர்ப்பாயம் சென்னையில் உள்ளது. சென்னை, மதுரை, கோவையில் காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

டிரைவர் – 02

அலுவலக உதவியாளர் – 18

இரவு காவலாளி – 02

துப்புரவு பணியாளர் – 02

இரவு காவலாளி – துப்புரவு பணியாளர் – 01

என மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

கல்வி தகுதி:

டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் எல்.எம்.வி டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருப்பது அவசியம். அலுவலக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். இதர பணியிடத்திற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.

Tamil Nadu Sales Tax Job

வயது வரம்பு:

18 வயது நிரம்பியவர்களும் 32 வயதுக்கு உட்பட்டவரும் விண்ணப்பிக்கலாம். எம்பிசி/பிசி, பிசிஎம் உள்ளிட்ட பிரிவினருக்கு 34 வயது வரையும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 18 முதல் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயது வரை வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு:

1. டிரைவர்: ரூ. 9500 – 71900/-

2. அலுவலக உதவியாளர்: ரூ. 15700 – 58100/-

3. நைட் வாட்ச்மேன்: ரூ. 15700 – 58100/-

4. தூய்மை பணியாளர்: ரூ. 15700 – 58100/-

5. இரவு காவலர் (தூய்மை பணியாளர்): ரூ. 15700 – 58100/-

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடைபெறும். நேர்முகத்தேர்வு நடைபெறும். அதன்பிறகு தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?:

விண்ணப்பதரர்கள் தங்களின் சுய விவரங்கள் மற்றும் இதர விவரங்கள் ஆகியவற்றினை குறிப்பிட்டு முழுமையான வடிவத்தில் https://ctd.tn.gov.in/home என்ற இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து விண்ணப்பித்தல் வேண்டும்.

* இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.

* விண்ணப்பங்கள் 11.11.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் பதிவஞ்சல் /விரைவு தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

Read also: Cognizant hiring 2024-சென்னையில் காக்னிசண்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

தலைவர், தமிழ்நாடு விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம்

2-ஆம் தளம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம், உயர் நீதிமன்ற வளாகம், சென்னை -104

Tamil Nadu Sales Tax Job

stat

Tamil Nadu Sales Tax Job Vacancies-விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்ய மற்றும் தேர்வு அறிவிப்பினை படிக்க Click Here

FacebookWhatsAppTwitterPinterestEmailShare
Exit mobile version